Wednesday, December 21, 2011

விழி தேடுகிறேன்...

நானோ நிறமின்றி இருக்கிறேன்...

இந்த
உடையின் நிறம் பிடிக்கவில்லை என்று குறைபடுகிறாய் நீ...

நானோ வெளிச்சம் இல்லாமல்
வாழ்கிறேன் ...

ஐயோ கண் கூசுகிறது என்று
சூரியனை வசை பாடுகிறாய் நீ...

அகக்கண்ணின் கற்பனையில் நான்...

கண் இருந்தும் கனவுகளுக்குள் நீ...

என்றோ ஓர் நாள் ஒரே புள்ளியில் இணைவோம்...

விழி தானத்தின் மூலம்!!!




Thursday, December 1, 2011

சென்னையில் ஒரு மழைக்காலம் (புலம்பல்கள்)

வெக்கையா இருக்குது...

ஐயோ...தாங்க முடியலயே...

கடுப்பா வருது...

அதிகாலைல பார்த்தாலும் உச்சி வெயில்தான் மண்டைய பொளக்குது...

எப்பதான் விடிவு காலமோனு ஏங்கி தவிச்ச வேளைல...

தமிழகத்தின் சில இடங்களில் பரவலாக மழை பெய்யும்னு நியூஸ்...

ஹும்ம்ம்...மழை அப்புறம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட ஆரம்பிச்சுச்சு...

ஹைய்ய்ய் ஜாலி...

இனி வெயில் இல்லை தொல்லை இல்லைனு பாட்டு பாடவே ஆரம்பிச்சாச்சு...

குடை பிடித்து மழைல நடக்குறப்போ அப்படி ஒரு சந்தோஷம்...

ஆனா இதெல்லாம் முதல் நாள் மட்டும்தாங்க :(...

எங்க ரோடு உங்க ரோடு மட்டும் இல்ல,எல்லா ரோடும் சகதிக்காடு...

என் செருப்பு சகதியில சிக்கி அறுந்து போச்சு...

துவச்சு போட்டிருந்த டிரஸ்லாம் நனைஞ்சு போச்சு...

வெறும் மழைத்தண்ணினா நடந்துறலாம்...

இங்க சாக்கடை தண்ணியும்,குப்பையும் சேர்ந்து ஒரு மினி கூவம் ஆறு...

மழை வலுத்தது...என் பிரச்சனைகளும் வலுத்தது...

இங்க இருந்து ஒரு இடத்துக்கு பஸ்ல போகணும்னாலும்,

மழைனால டிராபிக்...

15 நிமிசத்துல போற இடத்துக்கு ஒரு மணி நேரம் ஆகுது...

பேசாம ஒரு போட்(boat) வாங்கிருக்கலாமோ :? ...

எங்க பார்த்தாலும் தண்ணி...ஈரம்...நசநசப்பு...

இப்போ நினைக்கிறன்...

இந்த மழைக்கு ஒரு முடிவே கிடையாதான்னு...

சென்னையின் மழைக்காலம்...என் வாழ்வின் சோதனைக்காலம்...

ச்சே என்ன வாழ்க்கைடா இது :(

அதோ ஆபத்பாந்தவனாய் என்னை ரட்சிக்க வந்துவிட்டான் கதிரவன்...



மீண்டும் வேண்டுகிறேன்...

இந்த வெயிலுக்கு ஒரு விடிவு காலமே கிடையாதான்னு...;)