தீபாவளி ஷாப்பிங் தி.நகரில்...
எள் கூட விழ முடியாத அளவு ஜன நெருக்கடி...
மழைத்தூறலில் குடை பிடிக்கக் கூட வழி இல்லை...
வெற்றி! வெற்றி!
கடைக்குள் நுழைந்து விட்டோம்...
ஆரஞ்சு கலர்ல எடுத்துக் காட்டுங்க...
இந்த ப்ளூ சாரி அழகா இருக்குல்ல...
ஹேய் , இது நல்லாருக்கா பாரு...
இந்த கலர்ல என்கிட்ட ஏற்கனவே ஷர்ட் இருக்கு...
மம்மி , எனக்கு இந்த டிரஸ் பிடிக்கல...
ஆயிரம் குரல்கள்...
அத்தனையிலும்...
கூட்டத்தின் மத்தியில் தொலைந்து போன ஒரு குழந்தையின் ,
மகிழ்சிக்குரல் மட்டும் செவியை எட்டியது...
ஹைய்ய்ய் , அம்மாவ கண்டு பிடிச்சுட்டேன்...;)
Tuesday, October 11, 2011
Monday, October 10, 2011
ஜனனம்
மேகத்தின் கருவறையிலிருந்து
ஜனித்த மழைத்துளி
ஒவ்வொரு முறையும்
நம்மை புதிதாய் ஜனிப்பித்து
விடுகிறது
தன் தொடுகையால்...
ஜனித்த மழைத்துளி
ஒவ்வொரு முறையும்
நம்மை புதிதாய் ஜனிப்பித்து
விடுகிறது
தன் தொடுகையால்...
Thursday, October 6, 2011
CAMERA பார்வை
10 அடிக்கும் உயரமாய் , நீளும் கண்ணாடி ஜன்னல்...
ஆதவன் , பூமியைத் தற்காலிகமாய் பிரிந்து செல்லும் நேரம்...
ஹேய் ,எவ்ளோ அழகாயிருக்கு , SUPERB ,WOW , FANTASTIC - வித விதமாய் குரல்கள்...
என்னதான் நடக்கிறது???? நாமும் பார்க்கலாமே என்று சென்றேன்...
அங்கு........
பொன்னை உருக்கி புடமிட்டது போன்ற வண்ணப் புடவையை அணிந்து ஜாலம் காட்டுகிறாள் ஆகாய அன்னை...
கோவைப் பழமாய் சிவந்திருக்கும் சூரியன்...
அத்தனை அழகும் ஒருங்கே சேர்ந்தாற்போல் காணக் கண் கோடி வேண்டுமென்றாலும்...
நாம் பார்ப்பது கேமராவின் கண்களால் MEGAPIXEL இல் மட்டுமே...
மறையத் தொடங்கும் 5 நிமிடத்திற்குள் ,
படம் பிடித்து "C " DRIVE இல் COPY செய்து,
FACEBOOK இல் UPDATION 2 நிமிடத்திற்குள்...
அடுத்த 1 நிமிடத்திற்குள் 10 LIKES , 4 COMMENTS...
UPDATE பண்ணியதோடு வேலை முடிந்தது...
அந்த படத்தை எத்தனை முறை திரும்பப் பார்க்கப் போகிறோம்???
பத்தோடு பதினொன்றாக இயற்கைக் காட்சிகளில் இதுவும் ஒன்று...
என்றோ ஒரு நாள் டெஸ்க்டாப்பிலோ இல்லை மொபைல் போனிலோ WALLPAPER -ஆக வரும் வாய்ப்புண்டு...
அத்தோடு சரி...
இயற்கையின் வனப்பை...
புறத்தின் கண்களால் படம் எடுத்து அகத்தில் பதிய வைக்க யாருக்கும் மனமில்லை...
எந்திரமயமான உலகத்தில் எந்திரம்தான் பார்க்கிறது , இரு விழி நமக்கிருந்தும்...
நினைத்துக்கொண்டே சொல்கிறேன் தோழியிடம்...
ஹேய் , என் MOBILE-ah மறந்துட்டேன் , போட்டோ எடுக்கணும் , இரு எடுத்துட்டு வரேன்... ;-)
Tuesday, October 4, 2011
திருக்குறள்
அறத்துப்பால் :- பாயிரவியல்
கடவுள் வாழ்த்து:
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருகின்றன . அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருகின்றது.
Saturday, October 1, 2011
மண்பானைச்சோறு
அழகிய கிராமம்...
புல்வெளியைப் பசும்போர்வையாய்ப் போர்த்திய மலைகளுக்கிடையே எட்டிப் பார்க்கிறான் கதிரவன்...
மறைவதற்கா ? இல்லை எழுவதற்கா ?
ஒ , அந்தி மாலைப்பொழுதாகி விட்டது ...
விடை பெற்ற சூரியனைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தாள் நிலவுப்பெண்...
ஆற்றங்கரை ஆலமரத்து ஊஞ்சல்...
சலசலக்கும் நீரோடை...சுகந்தமான தென்றல்...
ஒற்றை மாமரம்...மின்மினிப் பூச்சிகளின் சிருங்கார நாதம்...
மண்பானையில் சமைத்த சம்பா அரிசி சாதம்...
மண்சட்டியில் மணக்க மணக்க வைத்த பருப்புக்குழம்பு...
அம்மியில் அரைத்த துவையலில் அம்மாவின் கைமணம்...
கரையில் அமர்ந்து நட்சத்திரங்களுடன் கதை பேசியபடி நான் இருக்க
வாழை இலையில் பிசைந்து அம்மா தரும் கைப்பிடி சாதம்...
நாவில் ருசி நிற்க சப்புக்கொட்டி கையை நீட்டினேன்,
அம்மா இன்னொரு உருண்டை...
ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ..........
நிகழ்காலத்திற்கு மீட்டது குக்கரின் விசில் சப்தம்...

Subscribe to:
Posts (Atom)