Tuesday, July 28, 2015

யாதுமானாய்

நெடும்தவத்திற்கான வரம் அடையும்
பட்டாம்பூச்சியாய் மாறிவிட ஆசை,
உன் மௌனக்கூட்டை உடைக்கவாவது...
______
உனக்காக இயற்றப்படுவதை உணரா கவிதை
வீழ்ந்து மடிந்தது குப்பை தொட்டிக்குள்...
______
யாவிலும் நல்லவற்றயே காண வேண்டும்...
ஆதலால் நான் உன்னையே காண்கிறேன்...
______
நித்தமும்,
உனைத் தேடி அலைபாயும்,
என் இரு விழிகள்,
இமை சோரும் முன்...
உயிர் சேர வா...
______
உன் ஓரப்பார்வை
உன் இதழ் விரியாப்புன்னகை போதும்
நான் பெண்ணென்பதை உணர்த்த...
நாணம் சட்டென்று குடி கொள்கிறதே என்னுள்...
______
 

Friday, November 7, 2014

பிரிவு

உனக்கான என் நொடிகளை
உணர்த்தும்
தனிமையின் வெறுமை...

உனைத் தேடும் என் நாட்களை
நகர்த்தும்
வெறுமையின் இருள்...

என்றேனும்,
உனக்கும் எனக்குமான புரிதலில்
மறையட்டும் இப்பிரிதலின் வலி...


Tuesday, July 22, 2014

பொம்மை பாப்பா

சொப்பு சாமானில் 

மண் சமைத்து, 

பொம்மை பாப்பாவுக்கு 

சோறூட்டும் கணத்தில், 

அன்னையாகிறது குழந்தை. 


Friday, July 11, 2014

எங்கோ ஒரு மூலையில்

நாம் பீட்சா,பர்கர் சாப்பிடும் நேரத்தில், அம்மா இன்னைக்கு சுடுசோறா எனக்கேட்டு சந்தோசப்படுகிறாள் எங்கோ  ஒரு சிறுமி...

நம் கைகள் கணினியில் கேம் விளையாடும் நேரத்தில்,கிரிக்கெட் விளையாட வச்சிருந்த தென்னை மட்டய  சாக்கடைல போட்டுட்டான் அண்ணன்னு அழுகிறான் எவனோ ஒரு சிறுவன்...

நாம் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யும் போது ,அண்ணாச்சி யாவாரம் சரியா ஆவல ,பாக்கிய பின்னால தரேன்னு வட்டிகாரரிடம் அப்டேட் செய்கிறார் யாரோ ஒரு கூலித்தொழிலாளி...

நாம் ஆர்குட்டில் கமெண்ட் போடும் போது , வேலய ஒழுங்கா செய்ய மாட்டியால ? என்று கமெண்ட் வாங்குகிறான் ஏதோ ஒரு குழந்தைத்தொழிலாளி...

நாம் கூகிள் ப்ளஸில் +1 போடும் போது , அய்யா இதோட 101ஆவது பெட்டி என்று அடுக்குகிறான்  தீப்பெட்டி தயாரிக்கும் சிறுவன்...

நாம் இந்த டிரஸ் நல்லா இல்ல இந்த துணி சரி இல்லன்னு சொல்லும்போது , 40 ருபாய் சீட்டித்துணியை பார்த்து சிரிக்கிறது ஏழை மழலை...

20 நிமிடம் நடப்பதற்கே மூச்சு வாங்கி அப்பா எவ்ளோ தூரம் நடக்க வேண்டிருக்குனு வருத்தப்படும்போது ,10 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்கும் கிராமத்துப்பள்ளி மாணவர்கள்...

நாம் இன்னும் கிடைத்ததையே தேடிக்கொண்டிருக்கும்போது , எங்கோ ஒரு மூலையில் இன்னும் தொடங்கவேப்படாத தேடல்...




Thursday, December 26, 2013

காத்திருப்பு

நொடிகளின் கரைதலில்,

தவிப்புகள் உணராமல்,

யுகங்களாய் நீளும் நிமிடங்கள்...

ஒரு சொல்லிற்காய் தவிமிருந்து,

படபடவென துடிக்கும் இதயம்...

என்ன சொல்லப் போகிறாய்,

எனும் உதடுகளின் முணுமுணுப்பு...

சட்டை செய்யாமல்,

வந்த பதில் உணர்த்தும்,

நிராகரிப்பின் வலி...

சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தனாய்

மீண்டும் முயல்கிறேன்

ஒரு வ(வா)ரத்திற்காக...

-IRCTC TICKET BOOKING :( :) ;)






Thursday, February 28, 2013

பயணம்

ஜன்னல் இடம் தேடி எண்ணம் போகும்...

பால்யத்தை நினைவு படுத்தும் -

தாலாட்டலுடன் கூடிய இனிய உறக்கம்

நாம் கடக்கும் மரங்கள் நம்மைக் கடக்கும்...

தொடர் தடத்தில் வாழ்வின் பாதையை உணரவைக்கும்...

ஒரு தேடல் முற்றுபெறா ரயில் பயணம்...


Wednesday, March 14, 2012

தனிமை

இலையுதிர் காலம்

ஒற்றை மரம்

தனிமை....