Friday, July 11, 2014

எங்கோ ஒரு மூலையில்

நாம் பீட்சா,பர்கர் சாப்பிடும் நேரத்தில், அம்மா இன்னைக்கு சுடுசோறா எனக்கேட்டு சந்தோசப்படுகிறாள் எங்கோ  ஒரு சிறுமி...

நம் கைகள் கணினியில் கேம் விளையாடும் நேரத்தில்,கிரிக்கெட் விளையாட வச்சிருந்த தென்னை மட்டய  சாக்கடைல போட்டுட்டான் அண்ணன்னு அழுகிறான் எவனோ ஒரு சிறுவன்...

நாம் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யும் போது ,அண்ணாச்சி யாவாரம் சரியா ஆவல ,பாக்கிய பின்னால தரேன்னு வட்டிகாரரிடம் அப்டேட் செய்கிறார் யாரோ ஒரு கூலித்தொழிலாளி...

நாம் ஆர்குட்டில் கமெண்ட் போடும் போது , வேலய ஒழுங்கா செய்ய மாட்டியால ? என்று கமெண்ட் வாங்குகிறான் ஏதோ ஒரு குழந்தைத்தொழிலாளி...

நாம் கூகிள் ப்ளஸில் +1 போடும் போது , அய்யா இதோட 101ஆவது பெட்டி என்று அடுக்குகிறான்  தீப்பெட்டி தயாரிக்கும் சிறுவன்...

நாம் இந்த டிரஸ் நல்லா இல்ல இந்த துணி சரி இல்லன்னு சொல்லும்போது , 40 ருபாய் சீட்டித்துணியை பார்த்து சிரிக்கிறது ஏழை மழலை...

20 நிமிடம் நடப்பதற்கே மூச்சு வாங்கி அப்பா எவ்ளோ தூரம் நடக்க வேண்டிருக்குனு வருத்தப்படும்போது ,10 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்கும் கிராமத்துப்பள்ளி மாணவர்கள்...

நாம் இன்னும் கிடைத்ததையே தேடிக்கொண்டிருக்கும்போது , எங்கோ ஒரு மூலையில் இன்னும் தொடங்கவேப்படாத தேடல்...




6 comments:

  1. நன்றாக எழுதி இருக்கீர்கள்
    வாழ்த்துக்கள்

    - ராமேஷ் கீர்த்தி

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இந்த blog-க்கு என்ன கமெண்ட் போடலாமென்று என்னும் நேரத்தில், எங்கேயோ ஒரு விவசாயி சிந்திக்கிறான், இந்த வருடம் என்ன விதைக்கலாம் என்று!

    ReplyDelete
    Replies
    1. இது முற்றிலும் உண்மை

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete