Wednesday, December 21, 2011

விழி தேடுகிறேன்...

நானோ நிறமின்றி இருக்கிறேன்...

இந்த
உடையின் நிறம் பிடிக்கவில்லை என்று குறைபடுகிறாய் நீ...

நானோ வெளிச்சம் இல்லாமல்
வாழ்கிறேன் ...

ஐயோ கண் கூசுகிறது என்று
சூரியனை வசை பாடுகிறாய் நீ...

அகக்கண்ணின் கற்பனையில் நான்...

கண் இருந்தும் கனவுகளுக்குள் நீ...

என்றோ ஓர் நாள் ஒரே புள்ளியில் இணைவோம்...

விழி தானத்தின் மூலம்!!!




Thursday, December 1, 2011

சென்னையில் ஒரு மழைக்காலம் (புலம்பல்கள்)

வெக்கையா இருக்குது...

ஐயோ...தாங்க முடியலயே...

கடுப்பா வருது...

அதிகாலைல பார்த்தாலும் உச்சி வெயில்தான் மண்டைய பொளக்குது...

எப்பதான் விடிவு காலமோனு ஏங்கி தவிச்ச வேளைல...

தமிழகத்தின் சில இடங்களில் பரவலாக மழை பெய்யும்னு நியூஸ்...

ஹும்ம்ம்...மழை அப்புறம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட ஆரம்பிச்சுச்சு...

ஹைய்ய்ய் ஜாலி...

இனி வெயில் இல்லை தொல்லை இல்லைனு பாட்டு பாடவே ஆரம்பிச்சாச்சு...

குடை பிடித்து மழைல நடக்குறப்போ அப்படி ஒரு சந்தோஷம்...

ஆனா இதெல்லாம் முதல் நாள் மட்டும்தாங்க :(...

எங்க ரோடு உங்க ரோடு மட்டும் இல்ல,எல்லா ரோடும் சகதிக்காடு...

என் செருப்பு சகதியில சிக்கி அறுந்து போச்சு...

துவச்சு போட்டிருந்த டிரஸ்லாம் நனைஞ்சு போச்சு...

வெறும் மழைத்தண்ணினா நடந்துறலாம்...

இங்க சாக்கடை தண்ணியும்,குப்பையும் சேர்ந்து ஒரு மினி கூவம் ஆறு...

மழை வலுத்தது...என் பிரச்சனைகளும் வலுத்தது...

இங்க இருந்து ஒரு இடத்துக்கு பஸ்ல போகணும்னாலும்,

மழைனால டிராபிக்...

15 நிமிசத்துல போற இடத்துக்கு ஒரு மணி நேரம் ஆகுது...

பேசாம ஒரு போட்(boat) வாங்கிருக்கலாமோ :? ...

எங்க பார்த்தாலும் தண்ணி...ஈரம்...நசநசப்பு...

இப்போ நினைக்கிறன்...

இந்த மழைக்கு ஒரு முடிவே கிடையாதான்னு...

சென்னையின் மழைக்காலம்...என் வாழ்வின் சோதனைக்காலம்...

ச்சே என்ன வாழ்க்கைடா இது :(

அதோ ஆபத்பாந்தவனாய் என்னை ரட்சிக்க வந்துவிட்டான் கதிரவன்...



மீண்டும் வேண்டுகிறேன்...

இந்த வெயிலுக்கு ஒரு விடிவு காலமே கிடையாதான்னு...;)





Friday, November 11, 2011

திக்கு தெரியாத ரோட்டில்

ஆள் அரவமில்லாத சாலை...

மின்சார பற்றாக்குறையாம்...

கண் தெரியவில்லை மை இருட்டில்...

எங்கோ ஓர் தெரு நாய் ஊளையிடும் சப்தம்...

பர்ஸ்ல வேற பணம் இருக்கே...

மனைவியோட நகைய வேற லாக்கர்ல இருந்து எடுத்துட்டு வர்றேனே...

யாராவது வந்து அடிச்சிட்டு போயிட்டா என்ன பண்றது...

கைலதான் கத்தி இருக்கே...பார்த்துக்கலாம்...

என்ன சத்தம் பின்னால்...

யாரோ வர்றாங்களே...

இருட்டுல தெரியலயே...

காலடி சத்தம் வேகமா கேட்குதே...

ஐயையோ!!!

என்னதிது???

இவ்ளோ பெரிய நிழலுருவம்...

திரும்பி திரும்பி பார்த்துகிட்டே வேகமா போறேன்...

ஓடி வர்ற மாதிரி தெரியுதே...

நாமளும் ஓடலாம்...

ஏதாவது ஒளியுறதுக்கு இடம் கிடைக்குமா...

அச்சச்சோ!!!

முட்டு சந்து...

என்ன பண்ணுறது இப்போ?...

தப்பிக்க ஏதாச்சும் வழி கண்டு பிடிக்கணுமே...

தட்...தட்...தட்...தட்...

அருகில் வந்தது உருவம்...

அடுத்து...

...

...

...

...

...

அதற்கு மேல் இல்லை...

பொட்டலம் மடித்த கிழிந்த பேப்பரில்...
;)








துரத்தும் தனிமை

அம்மா...

அப்பா...

அண்ணன்...

தம்பி...

அத்தனை சொந்தம் இருந்தாலும்...

தனிமைப் பறவையின் சிறகுகள் நிழலாய் என்னைத் துரத்துகின்றன...

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் IT Company -இல் நான்...





Tuesday, October 11, 2011

கண்டுபிடிப்பு

தீபாவளி ஷாப்பிங் தி.நகரில்...

எள் கூட விழ முடியாத அளவு ஜன நெருக்கடி...

மழைத்தூறலில் குடை பிடிக்கக் கூட வழி இல்லை...

வெற்றி! வெற்றி!

கடைக்குள் நுழைந்து விட்டோம்...

ஆரஞ்சு கலர்ல எடுத்துக் காட்டுங்க...

இந்த ப்ளூ சாரி அழகா இருக்குல்ல...

ஹேய் , இது நல்லாருக்கா பாரு...

இந்த கலர்ல என்கிட்ட ஏற்கனவே ஷர்ட் இருக்கு...

மம்மி , எனக்கு இந்த டிரஸ் பிடிக்கல...

ஆயிரம் குரல்கள்...

அத்தனையிலும்...

கூட்டத்தின் மத்தியில் தொலைந்து போன ஒரு குழந்தையின் ,

மகிழ்சிக்குரல் மட்டும் செவியை எட்டியது...

ஹைய்ய்ய் , அம்மாவ கண்டு பிடிச்சுட்டேன்...;)

Monday, October 10, 2011

ஜனனம்

மேகத்தின் கருவறையிலிருந்து

ஜனித்த மழைத்துளி

ஒவ்வொரு முறையும்

நம்மை புதிதாய் ஜனிப்பித்து

விடுகிறது

தன் தொடுகையால்...

Thursday, October 6, 2011

CAMERA பார்வை



10 அடிக்கும் உயரமாய் , நீளும் கண்ணாடி ஜன்னல்...


ஆதவன் , பூமியைத் தற்காலிகமாய் பிரிந்து செல்லும் நேரம்...

ஹேய் ,எவ்ளோ அழகாயிருக்கு , SUPERB ,WOW , FANTASTIC - வித விதமாய் குரல்கள்...

என்னதான் நடக்கிறது???? நாமும் பார்க்கலாமே என்று சென்றேன்...

அங்கு........

பொன்னை உருக்கி புடமிட்டது போன்ற வண்ணப் புடவையை அணிந்து ஜாலம் காட்டுகிறாள் ஆகாய அன்னை...

கோவைப் பழமாய் சிவந்திருக்கும் சூரியன்...

அத்தனை அழகும் ஒருங்கே சேர்ந்தாற்போல் காணக் கண் கோடி வேண்டுமென்றாலும்...

நாம் பார்ப்பது கேமராவின் கண்களால் MEGAPIXEL இல் மட்டுமே...

மறையத் தொடங்கும் 5 நிமிடத்திற்குள் ,

படம் பிடித்து "C " DRIVE இல் COPY செய்து,

FACEBOOK இல் UPDATION 2 நிமிடத்திற்குள்...

அடுத்த 1 நிமிடத்திற்குள் 10 LIKES , 4 COMMENTS...

UPDATE பண்ணியதோடு வேலை முடிந்தது...

அந்த படத்தை எத்தனை முறை திரும்பப் பார்க்கப் போகிறோம்???

பத்தோடு பதினொன்றாக இயற்கைக் காட்சிகளில் இதுவும் ஒன்று...

என்றோ ஒரு நாள் டெஸ்க்டாப்பிலோ இல்லை மொபைல் போனிலோ WALLPAPER -ஆக வரும் வாய்ப்புண்டு...

அத்தோடு சரி...

இயற்கையின் வனப்பை...

புறத்தின் கண்களால் படம் எடுத்து அகத்தில் பதிய வைக்க யாருக்கும் மனமில்லை...

எந்திரமயமான உலகத்தில் எந்திரம்தான் பார்க்கிறது , இரு விழி நமக்கிருந்தும்...

நினைத்துக்கொண்டே சொல்கிறேன் தோழியிடம்...

ஹேய் , என் MOBILE-ah மறந்துட்டேன் , போட்டோ எடுக்கணும் , இரு எடுத்துட்டு வரேன்... ;-)




Tuesday, October 4, 2011

திருக்குறள்

அறத்துப்பால் :- பாயிரவியல்

கடவுள் வாழ்த்து:
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருகின்றன . அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருகின்றது.

Saturday, October 1, 2011

மண்பானைச்சோறு

அழகிய கிராமம்...

புல்வெளியைப் பசும்போர்வையாய்ப் போர்த்திய மலைகளுக்கிடையே எட்டிப் பார்க்கிறான் கதிரவன்...

மறைவதற்கா ? இல்லை எழுவதற்கா ?

ஒ , அந்தி மாலைப்பொழுதாகி விட்டது ...

விடை பெற்ற சூரியனைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தாள் நிலவுப்பெண்...

ஆற்றங்கரை ஆலமரத்து ஊஞ்சல்...

சலசலக்கும் நீரோடை...சுகந்தமான தென்றல்...

ஒற்றை மாமரம்...மின்மினிப் பூச்சிகளின் சிருங்கார நாதம்...

மண்பானையில் சமைத்த சம்பா அரிசி சாதம்...

மண்சட்டியில் மணக்க மணக்க வைத்த பருப்புக்குழம்பு...

அம்மியில் அரைத்த துவையலில் அம்மாவின் கைமணம்...

கரையில் அமர்ந்து நட்சத்திரங்களுடன் கதை பேசியபடி நான் இருக்க

வாழை இலையில் பிசைந்து
அம்மா தரும் கைப்பிடி சாதம்...

நாவில் ருசி நிற்க சப்புக்கொட்டி கையை நீட்டினேன்,

அம்மா இன்னொரு உருண்டை...

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ..........

நிகழ்காலத்திற்கு மீட்டது குக்கரின் விசில் சப்தம்...





Friday, September 23, 2011

மழை தருமோ என் மேகம்

சில்லென்ற ஊதகாற்று ,வர்ண ஜாலங்கள் காட்டும் வானவில் ,நாசியை வருடும் இதமான மண் வாசனை ,கார் மேகம் புடை சூழ வானுக்கும் மண்ணுக்குமான பந்தமாய் சொட்டு சொட்டாய் வந்திறங்கியது செல்ல மழை.

தூறல்களின் ஊடே மாயக்கண்ணனின் மந்திரப்புன்னகையாய் ஒளிரும் மின்னல் ...

சப்தமாக சிரித்து விட்டேனா என்று கேட்டு மீண்டும் சிரிக்கும் இடி ...

புது மணப்பெண்ணாய் தலை கவிழும் பசும் இலைகள் ...

ரம்மியமான சூழல் ...

ரசித்து ஆர்ப்பரித்தது என் உள்ளம் ,அலுவலக நிசப்தத்தில்
ஜன்னலின் வழி பார்த்து ...

இதோ கிளம்பி விட்டேன்...

மயிலிறகாய் வருடும் மெல்லிசை, சூடான டீ , பஜ்ஜியுடன் நனைந்து கொண்டே மழையை துளித்துளியாக ரசிக்க வேண்டும்...ஆயிரம் கற்பனைகள் மனதில்

புதை மணல் போன்ற சேறு ,பல்லாங்குழி விளையாடத் தூண்டும் குண்டும் குழியுமான சாலைகளின் உபயத்தினால் நின்று அனுபவிக்க முடியவில்லை மழையின் பரவசத்தை , வரும் வழியில் .

முதல் வேலையாக சென்று மொட்டை மாடியில் மழையுடன் விளையாட வேண்டும் , ஓட்டம் பிடித்தேன் வீட்டிற்கு .

வாசலில் நான் நின்றவுடன் நின்றது மழையும் என்னுடன் ;-)






Thursday, September 22, 2011

Interior Designing

Some useful tips for Decorating your home:

1.Purchase the best your budget can afford.

2.Have a clear idea about what you want to purchase.

3.Allocate some budget(plan it well).

4.Draw the outline of your plan(Sketch your plan).

5.Color it according to your wish.

6.Purchase items that you need as per your plan.

7.Mix different colors and different kind of materials.It looks very natural if we are doing like that.It gives you a feel that you are in heaven.Painting the wall with same color makes you bored.Try something new and different.Show your creativity.

8.Refer some sites and magazines to get ideas.Don't confuse with colors and design.Choose your own.Don't be trendy.It will give a museum look.

9.Explore all the designing possibilities.Arrange the things in an orderly manner.

10.You can seperate a large room into smaller rooms wisely.

For more ideas...

http://www.seemydesign.com/

Tuesday, September 20, 2011

ஈஸி டிபன்

தேவையான பொருட்கள்:(2 பேருக்கு)

பால் அல்லது நீர்- 2 டம்ளர்
ஓட்ஸ் - 6 மேஜை கரண்டி
கருப்பட்டி - தேவையான அளவு

செய்முறை:

2 டம்ளர் நீருடன்(பாலுடன்) கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும்.கருப்பட்டி நீரில் கரைந்ததும் அதை வடிகட்டி கொள்ளவும்.இந்த பாகுடன் 6 மேஜை கரண்டி ஓட்ஸ் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.சிறிது கெட்டியான பதம் வந்ததும் இறக்கி விடவும்.

ஓட்ஸின் நன்மைகள்:

கூடுதல் கொழுப்பைக் கரைக்கும்.

மேலும் தகவல்கள்:
http://ezinearticles.com/?The-Six-Benefits-of-Eating-Oatmeal&id=131731

Monday, September 19, 2011

பஸ் வந்துடுச்சு

காலை 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து அடித்து பிடித்து கிளம்பி பேருந்து நிலையத்திற்கு 8 மணிக்கு வந்தால் பேருந்து வரவில்லை.

சரி ,இன்னும் சிறிது நேரம் காத்திருக்கலாம் என்று பார்த்தால் நிமிடங்களின் கரைதலில் ஆடி அசைந்து வந்து நிற்கிறது எட்டே முக்காலுக்கு.அதுவும் ஸ்டாப்பில் நிற்காது.ஓடி முண்டியடித்து ஏறினால் நிற்பதற்கு கூட வழி இல்லை.

நாமாவது பரவாயில்லை.இன்னும் சில பேர் ஒரு படி மேல், சாரி படி மேல் இல்லை படிக்கு கீழ் .அதாங்க தொங்கிகிட்டே வருவாங்க.

சரி , ஏன் தொங்கிட்டு வரணும் அடுத்த பேருந்துக்கு வெயிட் பண்ணி வரலாமே என்று கேட்டால் கோவிலுக்கு போகவே தேவை இல்லை,ஆயிரம் அர்ச்சனைகள் நம் பேரில் நடக்கும்.

கலவையான சென்ட் வாசனை,கலந்து ஒலிக்கும் பேச்சுக்குரல்களின் ஊடே நிற்பதற்கு கூட இடமில்லாத நிலை.

அழகான பஞ்சு பொதியாய் உறங்கி கொண்டிருக்கும் மழலை , சில்லென்ற காற்று , சிவந்து நிற்கும் வானம் , வெண் புறாவாய் பரவி நிற்கும் மேகம் , சீருடை அணிந்த சிறார்களின் அணிவரிசை , வழியில் பார்த்த வாசல் கோலம்...எதையும் ரசிக்க முடியவில்லை கூட்டத்தில்.

காதில் மாட்டியிருக்கும் இயர் போனையும் தாண்டி ஒலிக்கின்றன குரல்கள்,இந்தாம்மா ,கொஞ்சம் நகண்டு நில்லு , கிண்டி ரெண்டு , செக் போஸ்ட் நிக்குமா?

"பயணச் சீட்டை பயணப்படுத்தியே பாதிப் பேருந்துப்பயணம் முடிந்து விட்டது".

ஹப்பா இனி பஸ்லயே போக கூடாது மனதிற்குள் முடிவெடுத்தேன்.

இதோ என் ஸ்டாப் வந்து விட்டது.இறங்கி ஓடினேன் அடுத்த பேருந்தை பிடிக்க ;-)




Sunday, May 1, 2011

Stocking Flowers


u need
  1. Stocking ( different colours)
  2. Stocking wire or Metallic wire( different colours)
  3. Thread
  4. Stamens( available in different shapes and colours)
  5. Scissor
  6. Green tape
  7. Metallic paint
  8. Used nail polish bottle
  9. White stones
1.Make some petals using wire

2.Wrap the wire by the stocking and the stocking should be tightened around the wire using thread.

3.Make five petals for each flower(you can use different colors for flowers).

4.You can also make small flowers with three petals.

5.Then tie the petals in a wire with thread by setting the stamens in the middle in the form of a flower.

6.Make some leaves (similar to the making of petals).

7.Arrange the flowers and leaves in a wire and wrap them with floral tape.

8.To make the vase-Take a used nail polish bottle.Wrap the neck with golden wire and paint it using metallic black paint.Stick the stones and arrange the flowers into the vase.




Wednesday, April 27, 2011

கவிதை

தேடல்:
என்னுள்ளே என்னை தேடி எனக்குள்
புதைந்து போனேன்
அங்கு தேடாமலே கிடைத்து விட்டது
உன் இதயம் ...

பட்டாசு:
படபடவென்று பட்டாசு சப்தம்
தெருவெல்லாம் கோலாகலம்
விழியில் வழியும் நீரோடு
வேடிக்கை பார்த்தான்
பட்டாசு தயாரிக்கும் சிறுவன்...




Tuesday, April 19, 2011

கவிதை

பெயர்
எத்தனையோ முறை மனனம் செய்த
உன் பெயரை மறந்து விடுகின்றேன்...
உன்னை பெயர் சொல்லி அழைக்க தோன்றும் போது மட்டும்!

Wednesday, March 23, 2011

கவிதை

முதிர் கன்னி :
உறங்காத கனவுகளுடன்
தினம் தினம் உறங்கி எழுகின்றேன்
முதிர் கன்னி என்னும் பட்டத்தோடு!

கவிதை

ஈரம்:
நாட்டில் பஞ்சம்
நிலத்தில் ஈரமில்லை
பச்சிளம் குழந்தை பசியால் அழுதது
அதன் விழியோரம் மட்டும்
ஈரம்!