Wednesday, March 14, 2012

தனிமை

இலையுதிர் காலம்

ஒற்றை மரம்

தனிமை....



Wednesday, February 29, 2012

கனவு மெய்ப்பட வேண்டும்

கடைசி வருட(final year) ப்ராஜெக்ட்...

என்ன ப்ராஜெக்ட் பண்ணலாம்...

யோசிச்சு யோசிச்சு...

digital image processingla பண்ணலாம்னு முடிவெடுத்தோம்...

Matlabla (tool for image processing) பண்ண ஆரம்பிச்சாச்சு...

ஓகே

உங்க ப்ராஜெக்ட் டைட்டில் இன்னும் ரெண்டு நாள்ல சொல்லணும்...

ரெண்டு நாளா????

ரெண்டு மாசமா அலைஞ்சாலும் என்ன பண்ணனும்னு தெரியாதே...

சரி, பார்ப்போம்...

ஹ்ம்ம்ம்...டைட்டில் கிடைச்சது...

வெறும் டைட்டில்-ah வச்சு என்ன பண்ண?????

ஆரம்பிக்கணுமே...

ஆரம்பிக்கவே இல்ல...அதுக்குள்ள reviewnu சொல்லிட்டாங்க...

சரி சரி ஏதோ நம்மால முடிஞ்சத பண்ணுவோம்னு பண்ணியாச்சு...

ப்ராஜெக்ட் approve பண்ணிட்டாங்க(ஜாலி ஜாலி!!!!!) ...

அடுத்தது என்ன coding தான் ...

களத்தில் குதித்தோம்...

முழு மூச்சோட matlabla இறங்குனோம்...

coding எழுத ஆரம்பிச்சாச்சு...

ஆனா சரியானுதான் தெரியல...

எழுதுறோம்...error...

எழுதுறோம்...மறுபடியும் error...

சரி அப்புறம் பார்த்துக்கலாம்னு விட்டாச்சு...

ரெண்டு நாள்ல கடைசி review...

தூங்காமல் coding...சாப்பிடாமல் coding...

எங்கு நோக்கினாலும் coding மயம்...

கண்ண மூடினா கனவுல...codingdhanae...

"clc;clear all;close all;imadd(image1,image2);..."

இதுதாங்க வருது...

coding success...

சந்தோசமா காலைல எழுந்திரிச்சா,இன்னைக்கு code முடிக்கணும்ல பிரண்ட்ட இருந்து reminder...

அடடான்னு அடிச்சு பிடிச்சு எழுதி outputum எடுத்தாச்சு...

ஆனா பாவம் கஷ்டப்பட்டு own ப்ராஜெக்ட் எழுதுன எங்களுக்கு மார்க் கம்மி...

ப்ராஜெக்ட் சென்டர்ல வாங்குனவுங்களுக்கு மார்க் அதிகம்...

கேட்டா அது hardwareahm...இது softwareahm...

பின்ன எதுக்கு இத subject-ah வச்சாங்கன்னு நொந்தபடியே காலேஜும் முடிஞ்சுது...

அடுத்து IT fieldkul காலடி எடுத்து வச்சாச்சு...

இங்கும் தொடர்ந்தது என் coding வாழ்க்கை...

ஒரே ஒரு வித்தியாசம் அங்க MATLAB னா இங்க JAVA...

இப்போ "javac,hashmap,package,interface" மயம்தான்...

Build Successful...

program output is...

ஹை ஜாலி...

output வந்துருச்சு...

டிங் டிங் டிங் டிங்...

யாருப்பா அது இந்த நேரத்துல தொந்தரவு பண்றது...

திரும்பியதில்...

கீழே விழுந்து உடைந்தது...

அலாரம் அடித்த மொபைல்...