Monday, September 19, 2011

பஸ் வந்துடுச்சு

காலை 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து அடித்து பிடித்து கிளம்பி பேருந்து நிலையத்திற்கு 8 மணிக்கு வந்தால் பேருந்து வரவில்லை.

சரி ,இன்னும் சிறிது நேரம் காத்திருக்கலாம் என்று பார்த்தால் நிமிடங்களின் கரைதலில் ஆடி அசைந்து வந்து நிற்கிறது எட்டே முக்காலுக்கு.அதுவும் ஸ்டாப்பில் நிற்காது.ஓடி முண்டியடித்து ஏறினால் நிற்பதற்கு கூட வழி இல்லை.

நாமாவது பரவாயில்லை.இன்னும் சில பேர் ஒரு படி மேல், சாரி படி மேல் இல்லை படிக்கு கீழ் .அதாங்க தொங்கிகிட்டே வருவாங்க.

சரி , ஏன் தொங்கிட்டு வரணும் அடுத்த பேருந்துக்கு வெயிட் பண்ணி வரலாமே என்று கேட்டால் கோவிலுக்கு போகவே தேவை இல்லை,ஆயிரம் அர்ச்சனைகள் நம் பேரில் நடக்கும்.

கலவையான சென்ட் வாசனை,கலந்து ஒலிக்கும் பேச்சுக்குரல்களின் ஊடே நிற்பதற்கு கூட இடமில்லாத நிலை.

அழகான பஞ்சு பொதியாய் உறங்கி கொண்டிருக்கும் மழலை , சில்லென்ற காற்று , சிவந்து நிற்கும் வானம் , வெண் புறாவாய் பரவி நிற்கும் மேகம் , சீருடை அணிந்த சிறார்களின் அணிவரிசை , வழியில் பார்த்த வாசல் கோலம்...எதையும் ரசிக்க முடியவில்லை கூட்டத்தில்.

காதில் மாட்டியிருக்கும் இயர் போனையும் தாண்டி ஒலிக்கின்றன குரல்கள்,இந்தாம்மா ,கொஞ்சம் நகண்டு நில்லு , கிண்டி ரெண்டு , செக் போஸ்ட் நிக்குமா?

"பயணச் சீட்டை பயணப்படுத்தியே பாதிப் பேருந்துப்பயணம் முடிந்து விட்டது".

ஹப்பா இனி பஸ்லயே போக கூடாது மனதிற்குள் முடிவெடுத்தேன்.

இதோ என் ஸ்டாப் வந்து விட்டது.இறங்கி ஓடினேன் அடுத்த பேருந்தை பிடிக்க ;-)




2 comments: