Friday, September 23, 2011

மழை தருமோ என் மேகம்

சில்லென்ற ஊதகாற்று ,வர்ண ஜாலங்கள் காட்டும் வானவில் ,நாசியை வருடும் இதமான மண் வாசனை ,கார் மேகம் புடை சூழ வானுக்கும் மண்ணுக்குமான பந்தமாய் சொட்டு சொட்டாய் வந்திறங்கியது செல்ல மழை.

தூறல்களின் ஊடே மாயக்கண்ணனின் மந்திரப்புன்னகையாய் ஒளிரும் மின்னல் ...

சப்தமாக சிரித்து விட்டேனா என்று கேட்டு மீண்டும் சிரிக்கும் இடி ...

புது மணப்பெண்ணாய் தலை கவிழும் பசும் இலைகள் ...

ரம்மியமான சூழல் ...

ரசித்து ஆர்ப்பரித்தது என் உள்ளம் ,அலுவலக நிசப்தத்தில்
ஜன்னலின் வழி பார்த்து ...

இதோ கிளம்பி விட்டேன்...

மயிலிறகாய் வருடும் மெல்லிசை, சூடான டீ , பஜ்ஜியுடன் நனைந்து கொண்டே மழையை துளித்துளியாக ரசிக்க வேண்டும்...ஆயிரம் கற்பனைகள் மனதில்

புதை மணல் போன்ற சேறு ,பல்லாங்குழி விளையாடத் தூண்டும் குண்டும் குழியுமான சாலைகளின் உபயத்தினால் நின்று அனுபவிக்க முடியவில்லை மழையின் பரவசத்தை , வரும் வழியில் .

முதல் வேலையாக சென்று மொட்டை மாடியில் மழையுடன் விளையாட வேண்டும் , ஓட்டம் பிடித்தேன் வீட்டிற்கு .

வாசலில் நான் நின்றவுடன் நின்றது மழையும் என்னுடன் ;-)






No comments:

Post a Comment