Saturday, October 1, 2011

மண்பானைச்சோறு

அழகிய கிராமம்...

புல்வெளியைப் பசும்போர்வையாய்ப் போர்த்திய மலைகளுக்கிடையே எட்டிப் பார்க்கிறான் கதிரவன்...

மறைவதற்கா ? இல்லை எழுவதற்கா ?

ஒ , அந்தி மாலைப்பொழுதாகி விட்டது ...

விடை பெற்ற சூரியனைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தாள் நிலவுப்பெண்...

ஆற்றங்கரை ஆலமரத்து ஊஞ்சல்...

சலசலக்கும் நீரோடை...சுகந்தமான தென்றல்...

ஒற்றை மாமரம்...மின்மினிப் பூச்சிகளின் சிருங்கார நாதம்...

மண்பானையில் சமைத்த சம்பா அரிசி சாதம்...

மண்சட்டியில் மணக்க மணக்க வைத்த பருப்புக்குழம்பு...

அம்மியில் அரைத்த துவையலில் அம்மாவின் கைமணம்...

கரையில் அமர்ந்து நட்சத்திரங்களுடன் கதை பேசியபடி நான் இருக்க

வாழை இலையில் பிசைந்து
அம்மா தரும் கைப்பிடி சாதம்...

நாவில் ருசி நிற்க சப்புக்கொட்டி கையை நீட்டினேன்,

அம்மா இன்னொரு உருண்டை...

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ..........

நிகழ்காலத்திற்கு மீட்டது குக்கரின் விசில் சப்தம்...





No comments:

Post a Comment